பார்வையற்றவரிடம் ரூ. 3 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது!

தமிழகம்

ஆன்லைனில் கடன் தருவதாக கூறி பார்வையற்ற மாற்றுத்திறனாளியை ஏமாற்றி பண மோசடி செய்த டெல்லியை சேர்ந்த இரண்டு தமிழக பெண்கள் உட்பட 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்த சரவணன். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவரிடம் கடந்த அக்டோபர் 2020ம் ஆண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் “சௌத் இந்தியன் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளனர்.

தங்கள் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீடு இருப்பதாகவும், மாற்றுத்திறனாளி என்பதால் வருடத்திற்கு 1% குறைந்த வட்டியில் கடன் தொகை தருவதாகவும் கூறி நம்ப வைத்துள்ளனர்.

பல்வேறு காரணங்களை கூறி பல முறை பணத்தை டெபாசிட் செய்ய சொல்லி சரவணனிடமிருந்து பணத்தை பெற்றுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிய சரவணன் பல தவணைகளாக மொத்தம் ரூ-3,04,500 ஐ அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து அந்த நபர்களை தொடர்பு கொண்டபோது அவர்களது செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக சரவணன் கடந்த 2021ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜி வால் உத்தரவிட்டதின்பேரில் தனிப்படையினர் டெல்லி சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் செல்போன் எண்கள் மூலம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் டெல்லியை சேர்ந்த தமிழக பெண்கள் சாந்தி (37) க/வசந்தி ( 44) ,முனீஷ்சர்மா ( 44) ஆகியோரை சென்னைக்கு விசாரணை வரும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணை செய்ததில் சரவணனை போன்று அவர்கள் பலரை ஏமாற்றியது தெரிய வந்தது. மோசடி செய்த தொகை ரூ-3,04,500ஐ அவர்களிடமிருந்து போலீசார் மீட்டனர். விரைந்து நடவடிக்கை எடுத்து ஏமாந்த பணத்தை மீட்டு கொடுக்க உதவிய சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜி வாலை, புகார்தாரர் மாற்றுத்திறனாளி சரவணன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இவ்வழக்கில் மோசடியில் ஈடுபட்டவரகளை கைது செய்த தனிப்படை காவல் குழுவினரை சென்னை காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார். விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி முன்பின் தெரியாத நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லும் வார்த்தைகளை நம்பி பொதுமக்கள் ஏமாந்து பணத்தை செலுத்த வேண்டாம் என்றும் விழிப்புடன் இருக்குமாறும் சென்னை பெருநகர காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கலை.ரா

ரிஷப்பண்ட் தான் காரணம்..குட்டி ஸ்டோரி சொன்ன அஷ்வின்

விடிய விடிய ஆசிரியர்கள் போராட்டம் : 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *