சென்னையில் சோகம்… எலி மருந்தின் நெடியால் 2 குழந்தைகள் மரணம்!

தமிழகம்

சென்னையில் எலி பேஸ்ட் நெடி காரணமாக இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த தம்பதியினர் கிரிதரன்(34) – பவித்ரா(31). இவர்களுக்கு வைஷ்ணவி (6 ) என்ற மகளும் சாய் சுதர்சன் (1) என்ற மகனும் இருந்தனர்.

இவர்களது வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததாகவும், இதனால் எலி மருந்து, எலி பேஸ்ட் பயன்படுத்தி வந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

எனினும் எலி தொல்லை அதிகரித்த நிலையில் பெஸ்ட் கன்ட்ரோல் (pest controll) நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

அந்த நிறுவனத்தினர் கிரிதரன் வீட்டில் எலி மருந்தை வைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

இந்தசூழலில் மருந்து வைக்கப்பட்ட அறையில் ஏ.சி.போட்டு நேற்றிரவு தூங்கியுள்ளனர்.

அப்போது எலி மருந்தின் நெடி அதிகமாக இருந்ததால் நால்வருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பெற்றோர்கள் இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலி மருந்து நெடி காரணமாக இரு குழந்தைகள் உயிரிழந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்த எலி மருந்து நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

ஆதவ் அர்ஜூனா வைத்த கோரிக்கை: நிறைவேற்றிய உதயநிதி

எம். பி – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *