திண்டுக்கல்லில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுமியை காதலன் ஏர் கன்னால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள துவராபதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், மதுரை மாவட்டம் வெள்ளமலைப்பட்டியைச் சேர்ந்த வீரையா மகன் செல்லமும் (வயது 19) காதலித்து வந்துள்ளனர்.
துவராபதியில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக செல்லம் இன்று சென்றுள்ளார். அங்கு தனது சித்தப்பா அண்ணாமலை வீட்டில் வைத்து தனது காதலியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது செல்லத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாக அவரது காதலி கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்லம், சித்தப்பா வீட்டில் இருந்த ஏர் கன்னை எடுத்து காதலியை சுட்டுள்ளார். இதில் காதலியின் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
காதலியை சுட்ட விரக்தியில் இருந்த செல்லம், எலி மருந்து பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரையும் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது சிறுமியை காதலனே ஏர் கன்னால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘விடாமுயற்சி’ ரிலீஸ்: மகிழ்திருமேனி டிமாண்ட்… முரண்டு பிடிக்கும் லைகா!
“அரைச்ச மாவையே அரைக்க வேண்டாம்” – அதிமுக – பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி