புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 2004 – 2006 தமிழ்நாடு கேடர் பேட்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளான ஜெயஸ்ரீ, சாமுண்டேஸ்வரி, லக்ஷ்மி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகியோர் ஐஜி-ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
2009 – 2010 பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளான வெண்மதி, அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார் தாக்கூர், மகேஷ் குமார், தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, ராமர் ஆகியோர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
1999 கேடர் ஐபிஎஸ் அதிகாரிகளான ஆனந்த் குமார் சோமனி, ராமச்சந்திரன் ஆகியோர் ஏடிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தூத்துக்குடியில் சாதி கலவர பதட்டம்?
ஜப்பானை தாக்கும் சுனாமி, நிலநடுக்கம்: உதவி எண்கள் அறிவிப்பு!
ஜூனியர் என்டிஆரின் “தேவரா” பட அப்டேட்!