அடுத்த 2 மணி நேரத்தில்… 19 மாவட்டங்களுக்கு மழை!

தமிழகம்

அடுத்த 2 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (மே 9) தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், தென்காசி, திருநெல்வேலி, கன்னியகுமாரி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர்,

ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதே போல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

‘என் ரோஜா நீயா’ : சமந்தாவை காதலிக்கும் விஜய் தேவரகொண்டா

என்.ஐ.ஏ திடீர் சோதனை: 5 பேர் கைது!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *