ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகம்

தமிழகத்தைச் சேர்ந்த 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று(டிசம்பர் 2) உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, டெல்லி தமிழ்நாடு இல்ல கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வா, வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டாளர் கிரண் குராலா பேரூராட்சிகள் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

வீட்டு வசதி வாரிய இயக்குனராக இருந்த ஜதாக் சமூக நலம் பெண்கள் நலவாரிய இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளர் ஆபிரகாம் சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக மாற்றம்.

வீட்டுவசதித்துறை செயலாளராக இருந்த ஹிதேஸ்குமார் மக்வானா டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார கழக மேம்பாட்டு கழக இயக்குனராக இருந்த நந்தகோபால், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக மாற்றம்.

நகர்ப்புற மேம்பாட்டு இயக்குனராக இருந்த செல்வராஜ், தமிழ்துறை மேம்பாடு மற்றும் தகவல் துறை இயக்குனராக நியமனம்

சாலை மேம்பாட்டுத்துறை திட்டம் 2-ல் இயக்குனராக இருந்த கணேசன், நகர் ஊரமைப்பு இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நகர் புனரமைப்பு திட்டம் இயக்குனராக இருந்த சரவண வேல்ராஜ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குனராக பணியிடமாற்றம்.

தொழில்துறை சிறப்பு செயலாளராக இருந்த ஆர்.லில்லி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சிறப்பு செயலாளராக நியமனம்.

மருத்துவத்துறை பயிற்சி வாரிய செயலாளர் பூங்கொடி, சேலம் சாகோசெர்வ் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ஜான் லூயிஸ் அரசு கேபிள் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக எஸ்.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனர் எஸ்.ஜே.சி.குரு, சமூக நலத்துறை செயலாளராக மாற்றம்.

செல்வம்

நீதிபதிகளுக்கே மிரட்டலா? – பாஜக நிர்வாகியை எச்சரித்த நீதிமன்றம்!

அமைச்சர் சொன்ன 100% சுக‌ப்பிரசவம் சாத்தியமா?: மருத்துவர்கள் சொல்வது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *