பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பர்.
இதைப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளை அடிப்பது வழக்கம். இதை தடுக்கும் விதமாக அரசு ஒவ்வொரு பண்டிகையின்போது சிறப்பு பேருந்துகளை இயக்கும்.
அந்த வகையில் பொங்கலுக்கு 16,932 பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. 12,13,14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து மட்டும் 10,749 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று மற்ற ஊர்களில் இருந்து 6,183 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கம் உள்பட சென்னையில் இருந்து 7 இடங்களில் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
கலை.ரா
சென்னையில் ரோப் கார் சேவை : எங்கிருந்து எங்கு?
யூனியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை வைத்து தேடுதல்!