சிறுமி பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை!
வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி உறவினர்களால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் 21 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி உறவினர்களால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் 26 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் 22 பேர் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்ட 26 பேரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.
குற்றம்சுமத்தப்பட்ட மாரீஸ்வரன் விசாரணைக் காலத்தில் இறந்துவிட்டார்.
மீதமுள்ள 21 பேர் மீதான வழக்குகளைக் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார்.
விசாரணையின் முடிவில் எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி மதன்குமார், ஷகிதா பானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், கிரிதரன், ராஜா சுந்தர், நாகராஜ், பொன் ராஜ், வெங்கட்ராமன் ஆகிய 21 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இவர்களுக்கான தண்டனை விவரங்களை பிறகு அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 26) குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 21 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உறவினர்கள் 6 பேர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள மாரி, பாஷா, முத்துபாண்டி மற்றும் மீனா ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
அவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
பாஜக ஆர்ப்பாட்டம் : கோவையில் போக்குவரத்து மாற்றம்!
திட்டங்களை பற்றி பேசுவோம் : திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்!