ராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் இன்று (செப்டம்பர் 7) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை நிலைநாட்ட போராடினார்.
இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் வரும் 11ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனுசரிக்கப்பட உள்ளது. இதனையடுத்து தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
அதற்காக செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது நினைவு தினத்தையொட்டி, சிவகங்கையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக வரும் 23 ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதனைத்தொடர்ந்து, கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 9ஆம் தேதி நள்ளிரவு முதல் அக்டோபர் 31 வரை ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமி!
அரசியல்வாதிகளின் அதிகாரம் : நீதிமன்றம் அறிவுரை!