ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சென்னை வருகை!

தமிழகம்

ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 137 பயணிகளுடன் சிறப்பு ரயில் இன்று (ஜூன் 4) காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது.

ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294ஆக அதிகரித்துள்ள நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தநிலையில் கோரமண்டல் ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 867 பேர் முன்பதிவு செய்து பயணித்ததாக கூறப்பட்டது.

விபத்தினைத் தொடர்ந்து தமிழக பயணிகள் மீட்கப்பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை 8.30 மணிக்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 250 பயணிகளுடன் சிறப்பு ரயில் ஒன்று புவனேஷ்வரில் இருந்து சென்னை புறப்பட்டது.

வரும் வழியில் மற்ற மாநில பயணிகள் இறங்கிய நிலையில் இன்று காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த சிறப்பு ரயிலில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 137 பேர் இறங்கினர்.

அவர்களை நேரில் வரவேற்ற அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் நலம் விசாரித்தனர்.

மேலும் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், காயமடைந்த 8 பேர் அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மற்ற பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பள்ளிகள் திறப்பு: இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள்

மும்பை கடற்கரை திருப்பதி கோயிலுக்கு எதிர்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *