சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்குளம் கிராமத்தில், விவசாய கிணற்றில், 13 வயதுடைய சிறுமி கடந்த அக்.24ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் சிவகங்கை போலீசார் விசாரித்து வந்தன.ர
பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கை-கால்கள் உடைக்கப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டது உறுதியானது. தொடர்ந்து, அங்குள்ள சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.
சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சியில் , சிறுமியை இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது. வாகன எண்ணை கொண்டு கல்குளம் அருகேயுள்ள பட்டாணிக்குளம் கிராமத்தில் வசித்து வரும் சதிஷ் குமாரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது.
மதுரையில் வசித்து வரும் சதிஷ் குமாருக்கு திருமணம் முடிந்து மனைவியும் இருக்கிறார். சதீஷின் மனைவி சமீபத்தில் இரட்டைக்குழந்தைகளை பெற்றுள்ளார். ஒரு குழந்தை உடல்நலமின்றி உயிரிழந்தது. மற்றொரு குழந்தை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதற்காக அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மதுரையில் இருக்கின்றனர்
இதே மருத்துவமனையில் நத்தம், சிறுகுடி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தாயாரும், தனது அடுத்த பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சதிஷ் குமார் அந்த சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில்தான், கடந்த அக்டோபர் 24 அன்று தன்னுடன் கிராமத்திற்கு அழைத்து சென்று வீட்டில் வைத்து சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து, திரும்பி வரும் போது சிறுமி சதிஷ் குமாரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதிஷ் குமார் சிறுமியை கொலை செய்து, கை-கால்களை உடைத்து கிணற்றில் வீசியுள்ளார்.
இதையடுத்து, சதிஷ் குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதான சதிஷ் குமார் ஏற்கனவே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை பெற்றவர் ஆவார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சைபர் மோசடி : எச்சரிக்கையாக இருக்க மோடி அறிவுறுத்தல்!
“ஒவ்வொரு டெஸ்டிலும் சென்ட்டம்”… உதயநிதியைப் பாராட்டிய ஸ்டாலின்