தமிழகம் : மின்சாரம் வாங்கவோ விற்கவோ தடை!

தமிழகம்

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் இன்று முதல் மின்சார வர்த்தகம் மற்றும் பரிமாற்றத்தில் ஈடுபட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதன்காரணமாக ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட 13 மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது

buying and selling electricity banned

கடந்த ஜூன் மாதம் மின்சார அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட எல்.பி.எஸ் விதியின்படி, (Late Payment Surcharge and Related Matters) மின்சார விநியோக நிறுவனங்களுக்கு, மின்சார உற்பத்தி நிறுவனங்கள் நிலுவை தொகை செலுத்தாமல் இருந்தால் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நிலுவைத்தொகை செலுத்தாத மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

buying and selling electricity banned

மின்சார பரிமாற்றத்திற்கான பவர் சிஸ்டம் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்ற கட்டணமாக, ரூ.5,100 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு மேல் பாக்கி தொகையை செலுத்தாததால், பாக்கி தொகை செலுத்தாத வரையில், மின்சாரம் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 926 கோடி கடன் பாக்கி தொகை செலுத்த வேண்டியுள்ளது. அதிகபட்சமாக தெலங்கானா மாநிலம் ரூ.1380 கோடி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது.

செல்வம்

‘இலவச மின்சாரம் நிறுத்தப்படும் சூழல்’ – மின்சாரத் திருத்த மசோதா தாக்கல்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.