நடப்பாண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜனவரி 4) வெளியாகவுள்ளது.
நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் நாளை (ஜனவரி 4) வெளியாக உள்ளது.
நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ளதால் நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படவுள்ளது. முன்னதாக இந்த கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிலிக் செய்யவும்
மோனிஷா
உதயநிதி பற்றி சர்ச்சை வசனம்: நீக்கப்பட்டது ஏன்?
நடுவில் மாட்டிய கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!