சென்னையில் சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய போது மாநகர பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமிஸ்ரீ(17). அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் சுதந்திர தின விழாவை கொண்டாடி விட்டு ராஜேந்திர பிரசாத் சாலையில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பொழிச்சலூரிலிருந்து அஸ்தினாபுரம் செல்லும் 52எச் என்ற பேருந்து மோதி மாணவி சாலையில் விழுந்தார்.
இதில் தலை நசுங்கி மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓட்டுனர் தப்பியோடிவிட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கலை.ரா
வங்கிக் கொள்ளை: 3 பேர் கைது, 18 கிலோ தங்கம் மீட்பு!