கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 122 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று (மே 21) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,
தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கோடை வெப்பத்தைத் தவிர்க்கும் வகையில் நல்ல மழை பெய்து வருகிறது.
அந்தவகையில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 122 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
கோவை வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் 1.60 மில்லி மீட்டர், பி.என்.பாளையத்தில் 30.80 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையத்தில் 37 மில்லி மீட்டர், பில்லூர் அணையில் 10 மில்லி மீட்டர்,அன்னூர் பகுதியில் 31 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 54 மில்லி மீட்டர், சோலையாரில் 25 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மேட்டுப்பாளையம், ஆனைமலை ஆகிய பகுதிகளில் பேரிடர் மீட்பு படை குழு தயார் நிலையில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ரோமியோ” டூ “மழை பிடிக்காத மனிதன்” : விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அறிவிப்பு..!
share market: சில்லரை முதலீட்டாளர்களுக்கு சாதகமான பங்குகள் இதோ…