12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று(ஜூன் 19) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நில சீர்திருத்த ஆணையத்தின் முதன்மை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் எரிசக்தி துறையின் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எரிசக்தி துறையின் செயலாளராக இருந்த ராஜேஷ் சண்ட் மீனா சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராகவும், திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியராக இருந்த வீர் பிரதாப் சிங் வணிகவரித்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எரிசக்தி மேம்பாட்டு நிர்வாக இயக்குனராக இருந்து ஆயிஷா மரியம் சிறுபான்மை துறை ஆணையராகவும், தமிழ்நாடு சிறு நிறுவனங்கள் கழக இயக்குனராக இருந்த விஜயகுமார் அடையார்-கூவம் மறுசீரமைப்பு திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பட்டு வளர்ப்பு இயக்குனராக பணியாற்றி வந்த விஜயா ராணி கூட்டுறவு துறையில் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணைச் செயலாளராக பணியாற்றி வந்த சந்திரசேகர் சகாமுரி சேலம் பட்டு வளர்ப்பு துறை இயக்குனராகவும், தமிழ்நாடு நீர்வளத் துறையில் கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் தமிழ்நாடு சிமெண்ட் உற்பத்திக் கழகத்தின் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவர் ஸ்வர்ணா தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன தலைவராகவும், நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரியாக ரஞ்சித் சிங் ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக அலர்மேல் மங்கையும், தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுரேஷ்குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சென்னையில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர்
பேருந்துகள் மோதல்: நால்வர் பலி – விபத்துக்குக் காரணம் என்ன?