12 மணி நேர வேலை: மசோதா நிறைவேற்றம், திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு!

அரசியல் தமிழகம்

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றும் மசோதா கடும் எதிர்ப்புக்கு இடையே இன்று (ஏப்ரல் 21) சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் கடைசி நாளான இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார்.

இதற்கு திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

எனினும் கடும் எதிர்ப்புக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மூலம் வாரத்தில் 48 மணி நேரம் பணி இருக்கும் என்றும், வாரத்தில் 3 நாட்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

மணீஷ் காஷ்யப் கைது: தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? : முதல்வர் ஆவேசம்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0