12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு (2023) நடைபெறவுள்ள 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக இன்று (நவம்பர் 7) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,
“பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறும். இந்தத் தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 14ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இத்தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்” என தெரிவித்தார்.
10ஆம் வகுப்பு கால அட்டவணை
ஏப்ரல் 6 – தமிழ்
ஏப்ரல் 10 – ஆங்கிலம்
ஏப்ரல் 12 – கணிதம்
ஏப்ரல் 17 – அறிவியல்
ஏப்ரல் 20 – சமூக அறிவியல்
12ஆம் வகுப்பு கால அட்டவணை
மார்ச் 13 – தமிழ்
மார்ச் 15 – ஆங்கிலம்
மார்ச் 17 – கணினி அறிவியல்
மார்ச் 21 – இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 27 – கணிதம், வணிகவியல், விலங்கியல், நர்சிங்
மார்ச் 31 – உயிரியல், தாவரவியல், வரலாறு, புள்ளியியல்
ஏப்ரல் 3 – வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
ஜெ.பிரகாஷ்
“அதிமுக தலைமையில் கூட்டணியா?- எடப்பாடிக்கு அண்ணாமலை பதில்!
உச்சநீதிமன்ற தீர்ப்பு: ஓபிசி இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்-ராமதாஸ்