11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா? அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழகம்

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஆகஸ்ட் 15) கொடியேற்றினார்.

அதனை தொடர்ந்து, சாரண சாரணியரின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.

கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு, நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பேசினார்.

அதில் அவர் சாரண சாரணிகள் சிக்கனமாக, ஒழுக்கமாக. தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்துப் பேசினார். “11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்.

அதில் எந்த குழப்பமும் தேவையில்லை. அரசு வேலைவாய்ப்பு சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு 11 ஆம் வகுப்பு பாடங்களும் முக்கியம். மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் தனியார் பள்ளிகள், தங்களது பள்ளியின் தேர்வு முடிவை உயர்த்த வேண்டும் என்பதற்காக 11 ஆம் வகுப்பு பாடங்களை தவிர்த்துவிட்டு, நேரடியாக 12 ஆம் வகுப்பு பாடங்களை கற்பிக்கிறார்கள்.

இதனால் மாணவர்கள் போட்டிதேர்வுகளில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இந்த காரணத்திற்காக தான் 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முறைக் கொண்டுவரப்பட்டது என்று கூறினார்.

இதனை தொடர்ந்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்றும் கூறினார்.

சில தினங்களாக 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்துப் பரவி வந்த செய்திக்கு தற்போது அன்பில் மகேஷ் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

மோனிஷா

அன்று மின்சாரம்-இன்று குடும்ப அரசியல்: திமுகவை டார்கெட் வைக்கும் தங்கர் பச்சான்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.