11th class result will be released on 14th May!

11 ஆம் வகுப்பு ரிசல்ட் இந்த தேதியில் தான்…

தமிழகம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படும் என இன்று (மே 11) அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்றது.

இதில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தில் 94.56% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியானது. இந்த தேர்வில் 91.55 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படும் என இன்று அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

11th class result will be released on 14th May!

இதுத்தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் மே 14 (செவ்வாய்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் வெளியிடப்படவுள்ளது.

இத்தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையினை ஊடகவியலாளர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக காலை 9.40 மணிமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்களுக்கு அவர்களது தேர்வு முடிவுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்” எனவும் அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோபம் என்பது அவ்வளவு பெரிய குற்றமா?

Diamond League 2024: 2 செ.மீ-ல் தங்கத்தை தவறவிட்ட நீரஜ் சோப்ரா

+1
5
+1
2
+1
2
+1
18
+1
3
+1
2
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *