1100 special buses for four days

தொடர் விடுமுறை: 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம்

வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதி நாளான இரண்டாம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) மற்றும் ஞாயிற்றுக்கிழமையை (ஆகஸ்ட் 13) தொடர்ந்து, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால், அரசுத் துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 14) ஒரு நாள் விடுப்பு எடுக்கும்பட்சத்தில், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுப்பு கிடைப்பதால் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை வரை பயணிகள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.

நேற்று வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள ஆகஸ்ட் 11 அன்று 18,199 பயணிகளும்,

ஆகஸ்ட் 12 அன்று 6,949 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் 13  அன்று 4,514 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

இதை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு ஆகஸ்ட் 11  அன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகளும் மற்றும் ஆகஸ்ட் 12  அன்று 200 பேருந்துகளும் பல்வேறு இடங்களிலிருந்து,

அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15)  அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 12,257 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்களது பயணத்துக்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தச் சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியைப் பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று  அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: முட்டை அடை

ஃப்ரெண்ட்ஸ் பட இயக்குநர் சித்திக் காலமானார்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *