திருப்பூர் எஸ்.பி உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இன்று (ஜனவரி 27) பிறப்பித்துள்ள உத்தரவில்,
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை (Southern Range) எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்.பி.சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாகவும்,
திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாகவும்,
சென்னை, கொளத்தூர் துணை ஆணையர் சக்திவேல், சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளர்-I ஆகவும்,
மத்திய குற்ற புலனாய்வு பிரிவு, மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு எஸ்.பி.பாண்டியராஜன் கொளத்தூர் துணை ஆணையராகவும்,
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வடக்கு சரக எஸ்.பி சியாமளா தேவி, மத்திய குற்ற புலனாய்வு பிரிவு, மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாகவும்,
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தெற்கு சரக எஸ்.பி.சரவண குமார், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வடக்கு சரக எஸ்.பியாகவும்,
திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அபிஷேக் குப்தா, திருப்பூர் மாவட்ட எஸ்.பியாகவும்,
சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் ரோகித் நாதன் ராஜகோபால், கோவை வடக்கு துணை ஆணையராகவும்,
கோவை நகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் ராஜராஜன், திருப்பூர் வடக்கு நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும்,
மதுரை வடக்கு நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அனிதா, திருநெல்வேலி நகர தலைமையக துணை ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஆட்குறைப்பில் தீவிரம் காட்டும் பிளிப்கார்ட், ஸ்விக்கி… காரணம் என்ன?