10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (அக்டோபர் 14) வெளியிட்டுள்ளார்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை வெளியிட்டார்.
12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை!
முதலில் 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடர்ந்து பொதுத்தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு நேரமாக காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை என 3.15 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
11ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை!
11ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்வுகள் மார்ச் 5ஆம் தேதி தொடங்கி, 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை!
10ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வானது பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறும்.
பொதுத் தேர்வுகள் மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடர்ந்து தேர்வு முடிவானது மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… கலெக்டர்களுக்கு சென்ற அவசர கடிதம்!
ஆஸ்திரேலியாவுடன் போராடி தோல்வி… பாகிஸ்தான் வெற்றிக்காக காத்திருக்கும் இந்திய மகளிர் அணி!