நடப்பு நிதியாண்டில் 10000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகம்

நடப்பு நிதியாண்டில் 10000 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (பிப்ரவரி 19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்,  “மாநிலத்தில் உள்ள தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்காக இதுவரை 27,858 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆக மொத்தம் இந்த அரசு பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 10,000 பணியிடங்களை நடப்பு நிதி ஆண்டிலேயே நிரப்பும்பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

அரசு அலுவலர் குறைந்த வாடகையிலான குடியிருப்புகளின் தேவை அதிகரித்து வருவதை நிறைவு செய்யும் வகையில், சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 147 கோடி ரூபாய் செலவில், மூன்று இலட்சம் சதுர அடி பரப்பளவில் 95 B மற்றும் 133 C வகை குடியிருப்புகள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்களுக்குத் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில் நிதியுதவியாக 50,000 ரூபாய். 2023-24 ஆண்டில், 31-01-2024 வரை 19,134 ஓய்வூதியதாரர் குடும்ப உறுப்பினர்களுக்கு 96 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா

தமிழ்நாடு பட்ஜெட் : கல்லூரி மாணவர்களுக்கும் இனி 1,000 ரூபாய்!

மக்கள் இயக்கம் To வெற்றிக் கழகம்: விஜயகாந்தை பின்தொடரும் விஜய்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *