பூண்டி ஏரியில் 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை!

தமிழகம்

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், பூண்டி ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. மாண்டஸ் புயலின் தாக்கத்தால் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு மழை பெய்தது.

மேலும் பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, ஏரியின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளவை எட்டவுள்ளது. 35 அடி கொள்ளவைக் கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் தற்போது 34.43 அடியாக உள்ளது.

இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று (டிசம்பர் 10) ஏரியில் இருந்து 5,000 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தநிலையில், இன்று (டிசம்பர் 11) காலை 8 மணி முதல் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையில் அமைந்துள்ள 60 கிராமங்களுக்குத் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆற்றில் மக்கள் இறங்கவோ, குளிக்கவோ, துணிகளைத் துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

இன்று காலை 10.30 மணியளவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பூண்டி ஏரிக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

மோனிஷா

உக்ரைன் போர் குறித்து பேசியபோது கண்ணீர்விட்ட போப்

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்: சர்ச்சையான ஆர்யா பட டைட்டில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *