தமிழகத்தில் பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல பேருந்துகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மழை சமயத்தில் பேருந்துக்குள் தண்ணீர் ஒழுகுவதை வீடியோ எடுத்து பலர் சமூகவலைதளங்களில் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.
மோசமான பேருந்துகளால் விபத்துகளும் நடப்பதாக பயணிகள் குற்றம் சாட்டிவந்தனர்.
இந்தநிலையில் புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்தது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார்.
அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு புதிய பேருந்துகளுக்காக ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து ஒன்றுக்கு தலா ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், விழுப்புரத்திற்கு 180 பேருந்துகளும், சேலத்திற்கு 100 பேருந்துகளும், கோவைக்கு 120 பேருந்துகளும், கும்பகோணத்திற்கு 250 பேருந்துகளும், மதுரைக்கு 220 பேருந்துகளும், நெல்லைக்கு 130 பேருந்துகளும் என கணக்கீடு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கலை.ரா
கோகுல்ராஜ் கொலை: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
48,500 ஆண்டுகள் உறைந்திருந்த ஜாம்பி வைரஸ்: மனிதர்களுக்கு ஆபத்தா?