செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று (டிசம்பர் 12) காலை 9 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாகக் கடந்த ஒரு வாரமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த மழையால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன.
சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் அதன் முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடிவரை நீர் எட்டியுள்ளது.
ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு சுமார் 2,046 கனஅடியாக அதிகரித்திருக்கிறது. இதனால் நீர் இருப்பு 3,184 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால், ஏரியிலிருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம் உபரிநீர் வெறியேற்றப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக 186 சிறிய ஏரிகள் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
நள்ளிரவில் மெரினாவில் நடந்த சேஸிங்
ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!