பேட்டரியில் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும் 100% வரிச்சலுகை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின்,
நான்கு சக்கர வாகனங்களுக்கு 50% வரி சலுகை வழங்குவதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பயன்படுத்தப்படும் அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் (மின்சார வாகனங்கள்) 100% விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019-க்கு இணங்க பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகமும் கேட்டுக்கொண்டது.
இந்தநிலையில் 01.01.2023 முதல் 31.12.2025 வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100% வரி விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு நிதித் துறையின் ஒப்புதல் தேவையில்லை எனவும், தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரி விதிப்புச் சட்டம், 1974 பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
கைலாசாவுடன் அமெரிக்கா, இந்தோனேசியா ஒப்பந்தம்!
அண்ணாமலைக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு அதிகரிப்பு!