சென்னையில் 100 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மத்திய பணிமனையில் இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 66.15 கோடி ரூபாய் மதிப்பிலான 58 புதிய BS-VI தாழ்தள பேருந்துகள், 30 சாதாரண BS-VI பேருந்துகள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகளின் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோரும் உடனிருந்தனர்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 58 தாழ்தள பேருந்துகளின் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் எளிதில் ஏறி இறங்க வசதியாக பேருந்தின் தளம் 400 மி.மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தாழ்தளத்தின் உயரத்தை இடதுபுறத்தில் 60 மி.மிட்டர் அளவில் சாய்த்து மிக எளிதாக ஏறி, இறங்கும்படி kneeling வசதி உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் வீல்சேர் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் சாய்தளம் வசதியும்,
வீல்சேருடன் அமர்ந்து பயணம் செய்ய தனி இட வசதியும் உள்ளது.
தானியங்கி கதவுகள் மூடினால் மட்டுமே பேருந்தை நகர்த்த முடியும்.
பேருந்து நிறுத்தத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், ஒலி பெருக்கி மற்றும் காட்சி மூலம் தெரிவிக்கும் LED DISPLAY BOARD பொருத்தப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட அகலமான குஷன் இருக்கைகள் மற்றும் இட வசதி அதிகரிப்பதற்காக பேருந்தின் நீளம் 12 மீட்டர் மற்றும் காற்றோட்ட வசதி அதிகரிக்க அகலமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர் பேருந்தை பின்நோக்கி பாதுகாப்பாக இயக்க “Rear view camera”, பேருந்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், புதிய வடிவிலான Dash board அமைக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் முன்புறம் ஓட்டுநர் பார்வை மறைக்கும் இடத்தை கவனிக்க “Blind Spot Mirror” பொருத்தப்பட்டுள்ளது.
என்ஜினில் கூடுதல் வெப்பம் காரணமாக தீப்பற்றக் கூடிய சூழ்நிலை வந்தால், அணைப்பதற்கு Sensor உடன் கூடிய Fire Safety Nozzle Engine மேல் பகுதியில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நெட்ஃபிளிக்ஸில் ‘இந்தியன் 2’: கதறவிடப் போகும் தாத்தா!
மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார்… 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!