அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், தமிழ்நாட்டில் சில இடங்களில் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் உக்கிரமாகவே இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று (மே 29) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதனையடுத்து சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் தினமும் வெயில் 100 டிகிரியை தாண்டி தனது கோர முகத்தை காட்டி வந்தது.
கடந்த 16ஆம் தேதி அரக்கோணத்தில் இதுவரை இல்லாத அளவாக 115 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
கடந்த வாரம் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவானது.
இப்படி பொதுமக்களை வாட்டி வதைத்துவந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது.
இதனால் வெயிலின் தாக்கம் குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும், தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்னும் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பிரபல வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், “வங்கக் கடலுக்கு அருகில் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 100 டிகிரி வெயில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் கேரளா, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
’இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா?’: சாக்ஷி மாலிக் கேள்வி!
மல்யுத்த வீரர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா? சீமான் கண்டனம்!