தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள் அமைக்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மக்களின் போக்குவரத்து பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், புதிய புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் 2022-23 சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி புதிதாக 10 பேருந்து நிலையங்களை அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் இந்த பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. திருப்பூரில் ரூ. 26 கோடி மற்றும் ஓசூரில் ரூ. 30 கோடி மதிப்பில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி ஆகிய நகராட்சிகளிலும் பேருந்து நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையங்களை அமைக்க மொத்தம் 115 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
பிரியா
உதயநிதி-விஜய்- அண்ணாமலை: முக்கோண மோதலாகுமா தமிழக அரசியல்?
மதுரை மீனாட்சி அம்மன் சப்பர திருவிழா கோலாகலம்!