கனமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10 districts announced school leave
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இது மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி நிலைபெற கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழையும், 15 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக நேற்று மாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்புகள் வெளியானது. அதன்படி நேற்று நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய இரண்டு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.
இதனால் தீபாவளியை ஒட்டி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 3 நாட்களுடன், இன்று நான்காவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிப்பது அந்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 மாவட்டங்களில் கனமழை!
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக 27 மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர். ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 10 districts announced school leave
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜப்பான் vs ஜிகர்தண்டா 2 : தீபாவளி வின்னர் யார்?
கனமழை எதிரொலி: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அவசர கடிதம்!