தீபாவளியை ஒட்டி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான போனஸ் 10 சதவீதம் வழங்கப்படும் என இன்று(அக்டோபர் 14) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கலை.ரா
ஒரே இடத்தில் தந்தை, மகள் உடல்: நெஞ்சை பிசையும் சோகம்!
ஒரு தலை காதலுக்கு பலியாகும் பெண்கள்: நீளும் பட்டியல்!