பரவும் காய்ச்சல்: 1 முதல் 9-ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வா? – அமைச்சர் விளக்கம்

தமிழகம்

வைரஸ் காய்ச்சலை முன்னிட்டு தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று(மார்ச் 16) பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இன்று முதல் மார்ச் 26ம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு அங்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழ்நாட்டிலும் அதே போல் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், ’வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே தொடங்கி நடத்த திட்டமுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து அவர் பேசுகையில், ”1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகளை வைரஸ் காய்ச்சல் காரணமாக தேர்வுகளை மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை.

ஏற்கெனவே அறிவித்த கால அட்டவணைப்படியே தேர்வுகள் நடைபெறும். வைரஸ் காய்ச்சல் அதிகரித்தால் சுகாதாரத் துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,

மொழிப்பாடத் தேர்வை 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுத வராதது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான மாணவர்கள் ஆப்செண்ட் ஆகியுள்ளனர்.

அடுத்து வரும் தேர்வுகளில் ஆப்செண்ட் ஆகும் மாணவர்கள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து காரணத்தை கண்டறிய வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில் பெற்றோரும் தங்களது பிள்ளைகளை பொதுத்தேர்வு எழுத ஊக்குவித்து அனுப்பிவைக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ”அடுத்து வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்.

எனினும் இப்போது வரை பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைப்பது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை” என்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டக்கூடாது: பாஜகவை கண்டித்த ஜெயக்குமார்

”அதானி விவகாரத்தை எதிர்கொள்வதில் மோடிக்கு பயம்”: ராகுல் காந்தி விளாசல்!

1 to 9th std exams
+1
11
+1
7
+1
8
+1
7
+1
7
+1
7
+1
7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *