ஹாக்கர்களுக்கு பரிசு: சென்னை காவல்துறை அறிவிப்பு!

தமிழகம்

சென்னையில் ஹாக்கர்களுக்கு போட்டி அறிவித்துள்ள காவல்துறை அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

குற்றம் தடுப்பு நடவடிக்கைகளில் சிசிடிவி காட்சிகளின் பங்கு அதிகரித்து வரும் நிலையில் அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய  ஹேக்கத்தாள் என்ற பெயரில் எட்டு தலைப்புகளின் கீழ் சென்னை காவல் துறை போட்டி அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களை பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி காவல்துறையினர் தடுத்து வருகின்றனர் மற்றும் கண்டுபிடித்து வருகின்றனர்.

குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் பெரும்பங்கு வகிப்பது சிசிடிவி காட்சிகள் அவ்வாறு கிடைக்கபெறும் சிசிடிவி காட்சிகளில் பல நேரங்களில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக போதிய ஆதாரமில்லாமல் குற்றவாளிகள் தப்பித்து வரும் சூழ்நிலை நிலவுகிறது.

இந்த குறைபாடுகளை களையும் நோக்கில் சென்னை காவல்துறை ஹாக்கர்கள் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

அதில் எட்டு தலைப்புகளின் கீழ் தற்போது காவல்துறை சந்தித்து வரும் குறைபாடுகளுக்கு வல்லுநர்கள் தீர்வுகாண வேண்டும்.

இரண்டு கட்டமாக நடைபெற உள்ள இந்த போட்டியில்  மூன்று பேர் கொண்ட குழுவாக பங்கு பெறலாம்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வருகின்ற முப்பதாம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் முதல்,

கட்ட போட்டி டிசம்பர் மூன்றாம் தேதியும் இரண்டாம் கட்ட நேரடி போட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் சிசிடிவி காட்சிகளில் பதிவுசெய்யும் வாகனங்கள் பல நேரங்களில் மங்கலாக தெரியும். அந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை துல்லியமாக சிசிடிவி கட்சியிலிருந்து எடுத்துக் கொடுக்கும் வகையில் ஒரு போட்டி.

சிசிடிவி காட்சிகள் பதிவாகவும் குற்றவாளிகளின் முகம் தெளிவாக மாற்றிக் கொடுக்கும் வகையில் ஒரு போட்டி என எட்டு தலைப்புகளின் கீழ் இந்த போட்டி நடைபெற உள்ளது.

கலை.ரா

ராஜீவ் காந்திக்கு புதிய பதவி!

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களின் சிபாரிசுகளையே ஏற்கவில்லை- கெடுபிடி காட்டிய உதயநிதி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “ஹாக்கர்களுக்கு பரிசு: சென்னை காவல்துறை அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *