கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வீரர்களுக்காக நாமக்கல்லில் இருந்து 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. நாமக்கல் மாவட்டத்திலிருந்து, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று (நவம்பர் 22) தொடங்கி டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கால்பந்து போட்டிகளைக் காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கத்தாருக்குச் சென்றுள்ளனர்.
இதனால் கத்தாரில் உணவு தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்திலிருந்து கத்தாருக்கு ஒன்றரை கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்ப இன்னும் கூடுதலாக முட்டைகள் அனுப்பவும் முட்டை ஏற்றுமதியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
முட்டை உற்பத்தியில் முன்னிலையில் உள்ள துருக்கி நாட்டில் ஒரு பெட்டி முட்டை 36 டாலர்களாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் நாமக்கல் முட்டையின் தேவையும் அதிகரித்துள்ளது.
மோனிஷா
டீ குடித்து விட்டு காசு கொடுக்காத பாஜக எம்.எல்.ஏ!
சிவசங்கர் பாபாவுக்கு நெருக்கடி: வழக்கு ரத்தான உத்தரவு வாபஸ்!