9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி 54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட், 56வது பி.எஸ்.எல்.வி ராக்கெட்டாகும்.
இது ஓசன்சாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.
சதீஸ்தவாண் விண்வெளி நிலையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று(நவம்பர் 26)காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இந்தியாவின் ஓசன்சாட் மற்றும் அமெரிக்காவின் ஸ்பேஸ்பிளைட் நிறுவனத்தின் 4 செயற்கைக்கோள், நானோ சாட்டிலைட் உட்பட 9 செயற்கைக்கோள்கள் வெவ்வேறு சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
இந்தியா- பூடான் இணைந்து தயாரித்த சிறிய அளவிலான செயற்கைக்கோள் உள்ளிட்ட 8 சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
பூடான் செயற்கைக்கோளுக்கு ஆனந்த் என பெயரிடப்பட்டுள்ளது.மற்ற நானோ செயற்கைக்கோள்கள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள துருவா ஏர்ஸ்பேஸ் நிறுவனம் மூலம் தயாரி்க்கப்பட்டுள்ளது.
இது பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் நீட்டிக்கப்பட்ட வடிவமைப்பாகும். அதன்படி 24வது பி.எஸ்.எல்.வி-எக்ஸ்எல் ராக்கெட் இதுவாகும். 44.4 மீ உயரமும் 321 டன் எடையும் கொண்டு ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா அனுப்பும் ஓசன்சாட் செயற்கைக்கோள் பூமி கண்காணிப்புக்கும், நீர்வளங்களைக் கண்காணிக்கவும் செலுத்தப்படுகிறது.
1117 கிலோ எடை கொண்ட, இந்திய கடல் பகுதியை கண்காணிக்கும் ஓசன்சாட் செயற்கைக்கோள் முதல் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
பூமியிலிருந்து 723 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்படும் ஓசன்சாட் செயற்கைக்கோள் மூலம் கடலின் வெப்பநிலை, அதிவிரைவான புள்ளிவிவர சேகரித்தல் போன்றவற்றை செய்ய முடியும்
கலை.ரா
காதலனைத் தேடி 5000 கி.மீ பயணம்: மெக்ஸிகன் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
இந்திய அணி வராவிட்டால் பாகிஸ்தானும் வராது: ரமீஸ் ராஜா அதிரடி