வங்கியில் கொள்ளை : ஒரே பள்ளியில் பயின்றவர்கள் போட்ட திட்டம்!

தமிழகம்

சென்னையில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று பெடரல் வங்கியின் தங்க நகைப் பிரிவான பெட் வங்கியில் கொள்ளை நடந்தது.

முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் 32 கிலோ தங்க நகைகளை அள்ளிச் சென்றது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 15) சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கொள்ளையில் மூளையாக செயல்பட்ட வங்கி ஊழியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடை பெறுவதாகக் கூறினார்.

வங்கி ஊழியர்களுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளை நடந்ததாகக் கூறப்படும் நிலையில் அந்த குளிர்பானம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

வங்கியில் இருந்த அலாரம் அடிக்காததற்கான காரணம் குறித்தும், வங்கியின் பிற ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சுமார் 7 பேர் வரை சேர்ந்து 10 நாட்கள் திட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாகவும் இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார். தற்போது 18 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஓரிரு நாட்களில் மொத்த நகையும் மீட்கப்படும் என்றார்.

கலை.ரா

எழும்பூர் அருங்காட்சியத்தில் காந்தி சிலை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *