Kendriya Grihmantri Dakshata Padak

மத்திய அரசின் விருது பெறும் தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் யார், யார்?

தமிழகம்

தமிழக காவல்துறையைச் சேர்ந்த எட்டு பேர் உள்பட 463 பேருக்கு 2024-ம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‘திறன் பதக்க’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 முதல் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காவல் துறை, மத்திய பாதுகாப்பு அமைப்புகள், மத்திய,மாநில தடய அறிவியல், புலனாய்வு பிரிவு ஆகியவற்றில் சிறப்பு நடவடிக்கை, புலனாய்வு, நுண்ணறிவு, தடய அறிவியல் ஆகிய நான்கு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு ‘மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கங்களை வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்த விருது சிறந்த பணியை அங்கீகரிப்பதற்கும், உயர் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதற்கும், சம்பந்தப்பட்ட அலுவலர், அதிகாரிகளின் மன உறுதியை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி, அதாவது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று இந்த பதக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான இந்த விருது தமிழக காவல்துறையைச் சேர்ந்த எட்டு பேர் உட்பட பல்வேறு மாநிலங்களின் காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்), மத்திய காவல் அமைப்பு (சிபிஓ) ஆகியவற்றின் 463 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‘திறன் பதக்க’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக புலனாய்வுப் பிரிவில்

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் வந்திதா பாண்டே, கே.மீனா,

காவல் ஆய்வாளர்கள் எம்.அம்பிகா, என்.உதயகுமார், எஸ் பாலகிருஷ்ணன்,

ஏசிபி சி.கார்த்திகேயன், சி.நல்லசிவம்,

தடய அறிவியல் பிரிவு துணை இயக்குநர் சுரேஷ் நந்தகோபால்,

என எட்டு பேர் ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‘திறன் பதக்க’ விருதை பெறுகின்றனர்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : தமிழ்நாடு அரசு விடுமுறை முதல் வீகன் நாள் வரை

கிச்சன் கீர்த்தனா: மோத்தி லட்டு!

கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ்… ’கேப்டன்’களை அகற்றிய அணிகள் : காரணம் என்ன?

கோவை நகர போலீசை ரகசியமாக எச்சரித்த என்.ஐ.ஏ… பின்னணியில் கார் வெடிகுண்டு?

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *