பிளஸ் 1 தேர்வில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
கோவையை பொறுத்தவரை 15,546 மாணவர்களும், 18,664 மாணவிகளும் என மொத்தம் 34,210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.31 சதவீதம் மாணவர்கள், 97.49 சதவீத மாணவிகள் என மொத்தம் 96.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளுக்கான தேர்ச்சி விகிதத்தில் கோவை 4ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஈரோடு திருப்பூர் மாவட்டங்கள் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன்.
தலைநகர் சென்னை 17 இடத்தில் உள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்…
- கோவை 96.02
- ஈரோடு 95.56
- திருப்பூர் 95.23
- விருதுநகர் 95.06
- அரியலூர் 94.96
- பெரம்பலூர் 94.82
- சிவகங்கை 94.57
- திருச்சி 94.00
- கன்னியாகுமரி 93.96
- தூத்துக்குடி 93.86
- நெல்லை 93.32
- தென்காசி 93.02
- ராமநாதபுரம் 92.83
- நாமக்கல் 92.58
- கரூர் 92.28
- மதுரை 92.07
- சென்னை 91.68
- ஊட்டி 91.37
- சேலம் 91.30
- நாகை 91.09
- கடலூர் 91.01
- செங்கல்பட்டு 90.85
- தருமபுரி 90.49
- தேனி 90.08
- திண்டுக்கல் 89.97
- விழுப்புரம் 89.41
- தஞ்சை 89.07
- திருவண்ணாமலை 88.91
- புதுக்கோட்டை 88.02
- ராணிப்பேட்டை 87.86
- கிருஷ்ணகிரி 87.82
- திருவாரூர் 87.15
- காஞ்சிபுரம் 86.98
- திருப்பத்தூர் 86.88
- மயிலாடுதுறை 86.39
- கள்ளக்குறிச்சி 86.00
- திருவள்ளூர் 85.54
- வேலூர் 81.40
- காரைக்கால் 96.27
- புதுச்சேரி 97.89
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அதிமுக யார் கையில்? மே 12 சொன்ன பதில்!
பிளஸ் 1 ரிசல்ட் : 8,418 பேர் 100/100 மதிப்பெண்!