ஒரே நாளில் ரூ. 472 குறைந்தது தங்கம்!

Published On:

| By Kalai

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 472 ரூபாய் குறைந்து இருக்கிறது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 1802 டாலரில் இருந்து 37 டாலர் குறைந்து 1775 டாலருக்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை இறங்கு முகமாகி இருக்கிறது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 59 குறைந்து ரூ. 4,855 ஆக விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ. 472 குறைந்து ரூ. 33, 840-க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது இல்லத்தரசிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது. ஒரு கிராமுக்கு ரூ. 1.40 குறைந்து ரூ. 63.40 -க்கு விற்கப்படுகிறது.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel