சென்னையில் குறும்பட இயக்குனர் ஒருவரது வீட்டில் என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 8) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட குறும்பட இயக்குநர் முகில் சந்திரா என்பவர் வசித்து வருகிறார்.
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரது வீட்டில் என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகிறார்கள்.
மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாக ஏற்கெனவே சோதனை நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத்தில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதே போன்று ஆவடியிலும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் கோவை மற்றும் திருச்சி பகுதிகளை சேர்ந்த, சாட்டை துரைமுருகன், மதிவாணன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரது வீடுகளில் சோதனை நடைபெற்றது.
அதனடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள என்.ஐ.ஏ., அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி மற்றும் விஷ்ணு ஆகியோர் இன்று நேரில் ஆஜராக உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அந்த மூவரில் சிறந்த கேப்டன் யார்? : ஷமி தந்த சுவாரசிய பதில்!
TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!