ஒரு காலத்தில் களி, கூழ் எல்லாம் ஏழைகளின் உணவுகள். இன்றோ ஐந்து நட்சத்திர விடுதிகளில் களி பிரதான உணவு. சர்க்கரை, இதயநோய் என விதவிதமான நோய்கள் துரத்த துரத்த, மக்கள் தாங்கள் இழந்த பாரம்பர்யங்களை நோக்கி ஓடுகிறார்கள்.
இந்த நிலையில் நாமும் வீட்டிலேயே களி செய்து சுவைக்கலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
வரகரிசி – கால் கப்
கம்பு மாவு – 2 கப்
தண்ணீர், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வரகரிசியைத் தண்ணீரில் வேகவிடவும். முக்கால்வாசி வெந்து வரும்போது அதில் உப்பு மற்றும் கம்பு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளற வேண்டும். மாவு கட்டியாக ஆகாதவாறு கிளறி, தேவைப்பட்டால் சுடுநீர் சிறிது சேர்த்து, கரண்டியால் கிளறி பின் கைகளில் சுடச்சுட உருட்டினால், களி ரெடி.
இதற்குக் காரக் குழம்பு, கீரைக் குழம்பு தொட்டுக்கொள்ள ஏற்றது. களியைப் பொறுத்தவரை சுடச்சுடச் சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய், வெங்காயப் பச்சடி மற்றும் மொச்சைக்குழம்புடன் சாப்பிட மிகவும் ஏற்றது. உடல் பலமடையும். வியாதிகள் அண்டாது.
வீட்டிலேயே பலகாரம் தயாரிக்கப் போறீங்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!
கிச்சன் கீர்த்தனா : வரகு – அன்னாசிப்பழக் குழைச்சல்