கிச்சன் கீர்த்தனா : வஞ்சிரம் மீன் குழம்பு

தமிழகம்

அசைவப் பிரியர்கள் அனைவரின் ஃபேவரைட் லிஸ்டிலும் மீன் குழம்புக்கு எப்போதுமே தனி இடமுண்டு. புரட்டாசி மாதம் எப்போது முடியும் என்று காத்திருந்தவர்களுக்கு இந்த வஞ்சிரம் மீன் குழம்பு இன்று அசத்தல் விருந்து படைக்கும்.

என்ன தேவை?

வஞ்சிரம் மீன் துண்டுகள் (எலும்போடு) – 8
புளிக்கரைசல் – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
பொடியாக நறுக்கிய தக்காளி – 2 (விருப்பப்பட்டால்)
பூண்டுப் பல் – 8
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
தாளிக்க…
கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயபொடி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

பேஸ்ட் 1…

மல்லி (தனியா)  – 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
எண்ணெய் – தேவையான அளவு

பேஸ்ட் 2…

2 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காயை, தண்ணீர் விட்டு மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பொடி…

2 டீஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் கருகாத அளவுக்கு வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.

எப்படிச் செய்வது?

அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பேஸ்ட் செய்யக் கொடுத்தவற்றை பிரவுன் நிறமாகும் வரை, வதக்கி ஆற வைத்து… மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

(பேஸ்ட் 1, பேஸ்ட் 2 தனித்தனியாக அரைக்கவும்) மீனை நன்கு கழுவி, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் தடவித் தனியாக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்கக் கொடுத்தவற்றைப் போட்டுத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும் வரை, நன்கு வதக்கவும்.

தொடர்ந்து, பூண்டைச் சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து அது ஜூஸ் ஆகும் வரை வதக்கவும்.

இத்துடன் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், அரைத்து வைத்த முதல் பேஸ்ட், புளிக்கரைசல் சேர்த்து… தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.

பச்சை வாசனை போக குழம்பு கொதித்ததும், உப்பு சேர்த்து, இரண்டாவது பேஸ்ட்டைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு, மீனைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். மீன் விரைவாக வெந்துவிடும். பிறகு வெந்தயப் பொடியைச் சேர்த்து குழம்பை கிளறி அடுப்பை அணைக்கவும்.

நாட்டுக்கோழி உப்புக்கறி

கிச்சன் கீர்த்தனா : நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *