உயர்ந்து கொண்டே வரும் தங்கம் விலை!

Published On:

| By Monisha

சென்னையில் இன்று (நவம்பர் 7) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ. 38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

நேற்று (நவம்பர் 6) 22 கேரட் ஒரு சவரன் தங்கம் ரூ. 38,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையிலிருந்து இன்று (நவம்பர் 7) ரூ. 40 விலை உயர்ந்து ரூ. 38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5 விலை உயர்ந்து ரூ. 4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

அதே போல் 24 கேரட் ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ. 41,632-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 48 விலை உயர்ந்து ரூ. 41,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 6 விலை உயர்ந்து ரூ. 5,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 66.30-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 66,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

மீண்டும் கனமழை: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!

“தமிழிசை பூச்சாண்டி இங்கு எடுபடாது” – முரசொலி பதில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share