மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி, நடப்பாண்டு ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், இதுவரை இல்லாத உச்சமாக, 4.78 பில்லியன் (478 கோடி) டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் முலம் இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில்,தமிழ்நாட்டின் பங்கு 30.86 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி, கடந்த ஆண்டு 5.37 பில்லியன் (ரூ.537 கோடி) டாலர்களாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 8 பில்லியன் (ரூ.800 கோடி) டாலர்களாக அதிகரிக்கும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!