உயர்கல்வியில் ஜொலிக்கும் தமிழ்நாடு : ஸ்டாலின் பெருமிதம்!

Published On:

| By Kavi

இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில்  நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களின் பட்டியல் நேற்று (ஆகஸ்ட் 12) வெளியிடப்பட்டது.

இதில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. பொறியியல் பிரிவில் திருச்சி என்.ஐ.டி 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி சிறந்த கல்லூரி பிரிவில் 7ஆவது இடத்தையும், லயோலா கல்லூரி 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

மருத்துவ கல்லூரிகள் பிரிவில் வேலூர் சிஎம்சி மூன்றாவது இடத்தையும், பல் மருத்துவ கல்லூரிகள் பிரிவில் சென்னை சவீதா கல்லூரி முதல் இடத்தையும் பிடித்துள்ளன.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் டாப் 10 மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் பிரிவில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

இவ்வாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் தேசிய நிறுவன தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி இன்று (ஆகஸ்ட் 13) தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “

இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது!

தேசிய நிறுவன தரவரிசை பட்டியல் 2024ல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்ற மாநிலங்களை விட மிகவும் முன்னோக்கி நிற்கிறது, தரமான கல்விக்கான ஒரு அளவுகோலை நிர்ணயித்துள்ளது.

நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு இது ஒரு பெருமையான தருணம்!

நான்முதல்வன்,புதுமைப்பெண்,தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களின் மூலம் நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : அஸ்வத்தாமனுக்கு போலீஸ் காவல்!

தருமபுரி மக்கள் டாஸ்மாக் கடையை கேட்கவில்லை : அன்புமணி ராமதாஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share