தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று (மே 31) தெரிவித்துள்ளது.
தமிழக பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கோடை வெயில் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலன்கருதி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஜூன் 2வது வாரத்துக்கு தள்ளி வைக்கக்கோரி டாக்டர் ராமதாஸ் மற்றும் பலர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை சார்பாக இன்று (மே 31) வெளியிடப்பட்ட அறிவிப்பில், “2024-25ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும்.
தமிழகத்தின் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…