ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு 2 புதிய உறுப்பினர்கள்!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. 2017ல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ஆகியவை தொடங்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்த ஆணையம் தலைவர், உறுப்பினர்கள், சட்ட அதிகாரி உள்ளிட்டோருடன் இயங்கி வருகிறது.

இதில் வழக்கறிஞர் ஜெயக்குமார், பொதுப்பணித்துறை பொறியாளர் மனோகர் ஆகியோரின் பதவி காலம் முறையே  10.02.2024  மற்றும். 03.03.2024  ஆகிய தேதிகளில் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

இவர்களது பதவி காலம் முடிந்ததால் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட தேர்வு குழு கடந்த ஜூலை 4 ஆம் தேதி இருவரது பெயரை பரிந்துரைத்தது.

அதன்படி எல்.சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ் மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Budget 2024 : ‘நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்’ : தமிழ்நாடு புறக்கணிப்பால் கொந்தளித்த ஸ்டாலின்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share