ADVERTISEMENT

எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்களுக்கு 10 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வு இல்லை : காரணம் என்ன?

Published On:

| By Kavi

தமிழக காவல் துறையில் கீழ்மட்ட அளவில் பதவி உயர்வில் கால தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் நிலை காவலராக பதவி உயர்வு வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை காவலர் பதவி, அதாவது ஏட்டுவாக பதவி உயர்வு வழங்கப்படும்.

ADVERTISEMENT

இதிலிருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு எஸ்எஸ்ஐ பதவி கிடைக்கும்.

அதேபோன்று நேரடியாக எஸ்.ஐ.யாக தேர்ச்சி பெற்று வருபவர்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டராகவும், அதிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு டிஎஸ்பியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

ஆனால் 14 ஆண்டுகளுக்கு பிறகும் எஸ்.ஐகளுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 13 ஆண்டுகளுக்குமேலாக பணி செய்துவரும் இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பி பதவி உயர்வு வழங்கப்படவில்லை

“தமிழகம் முழுவதும் உள்ள 423 எஸ்ஐ ஸ்டேஷன்களை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தி எஸ்ஐகளுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்குமாறு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு அப்போதைய உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்க்கு கோப்பு ஒன்றை அனுப்பினார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அப்போதைய உள்துறை செயலாளர் அமுதா நிதித்துறை செயலாளரிடம் ஆலோசனை செய்துவிட்டு, நிதி நிலை தற்போது சீராக இல்லை என்று டிஜிபி அனுப்பிய ஃபைலை திருப்பி அனுப்பிவிட்டார். அதனால் தற்போது வரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை” என்கிறார்கள் தலைமை செயலகத்தில் உள்ளவர்கள்.

“2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக இருப்பவர்களுக்கு 20 வருடத்தில் ( எஸ்எஸ்ஐ) சிறப்பு உதவி ஆய்வாளர், 25 வருடத்தில் எஸ்ஐ, 35 வருடத்தில் இன்ஸ்பெக்டர் என பதவி உயர்வு வழங்குவோம் என்றார்.

ஆனால் தற்போது காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அதைப்பற்றி நினைக்கக்கூட நேரம் இல்லை. 38 ஆண்டுகளுக்கு பிறகும் எனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை” என்கிறார் திருநெல்வேலி மாவட்ட எஸ்ஐ ஒருவர்.

தகுதியின் அடிப்படையில், காலதாமதம் இன்றி  சரியான நேரத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று காவல்துறையினரிடையே கோரிக்கை வலுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன்2 பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வணங்காமுடி

தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு… கஸ்தூரி மீது குவியும் புகார்கள்!

குத்துச்சண்டை வீராங்கனை இமானுக்கு விதைப்பை… கர்ப்பப்பை இல்லை…பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share